ஜூன் 1 முதல் ஊரடங்கில் தளர்வு: அமைச்சர் சொன்ன தகவல்!
கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் அலையைவிட இரண்டாவது அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பும், உயிரிழப்பும் மற்ற நாடுகளைவிட அதிகளவில் இந்தியாவில் பதிவானது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை சரிவைச் சந்தித்து வருவது ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பை பதிவு செய்த மகாராஷ்டிரா தனது பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் மாதம் முதலே கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே தற்போது பாதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
முழு ஊரடங்கு அங்கு அமலில் உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார்.
பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முறை நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் ஊரடங்கினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்யும் பணியில் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. ஊரடங்கை விதிப்பதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதும் மாநில அரசுகளின் தலையில் விழுந்துள்ளது.
உதாரணமாக கடந்த ஆண்டு வங்கியில் இஎம்ஐ செலுத்துவதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் அப்படியான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதி வரை தீவிர முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் சில முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment