இன்னும் 2 மாதங்களில் இந்தியாவுக்கு நிறைய தடுப்பூசிகள் கிடைக்கும் - எய்ம்ஸ் இயக்குனர் தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

இன்னும் 2 மாதங்களில் இந்தியாவுக்கு நிறைய தடுப்பூசிகள் கிடைக்கும் - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

இன்னும் 2 மாதங்களில் இந்தியாவுக்கு நிறைய தடுப்பூசிகள் கிடைக்கும் - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்


இந்தியாவில், அடுத்த இரண்டு மாதங்களில், மற்ற நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்குமென, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வயதானவர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இணை நோய்கள் உள்ளவர்கள், மருத்துவர்கள் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தி உள்ளன.

இதனால், கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்காது. ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு, விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என, நம்புகிறோம். நாட்டில், அடுத்த 6 முதல் 8 வாரங்களில், மற்ற நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அல்லது ஓரிரு மாதங்களில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட முடியாது. இதற்கு தகுந்த திட்டமிடல் வேண்டும். கொரோனா தொற்று நோயை வெல்ல வேண்டிய அடிப்படை ஆயுதங்களில் ஒன்று, தடுப்பூசி. நடத்தை, மேலாண்மை உத்திகள் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை காப்பாற்ற முடியும்.

கொரோனா பரவலை தடுப்பதில் தடுப்பூசிகள் மிக முக்கிய பங்கு ஆற்றி வருகின்றன. பிரிட்டன் நாட்டில், கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தபோது, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கால அளவை, அந்நாட்டு அரசு 12 வாரங்களாக அதிகரித்தது. இதனால், பல்வேறு மக்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளால், அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad