இவங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை.. எய்ம்ஸ் மருத்துவர்கள் அட்வைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

இவங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை.. எய்ம்ஸ் மருத்துவர்கள் அட்வைஸ்!

இவங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை.. எய்ம்ஸ் மருத்துவர்கள் அட்வைஸ்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறூம் கொரோனா நோயாளிகள் ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் ஆன்லைன் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் எய்ம்ஸ் மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் நீரஜ் நிஸ்சல், “வீட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள் ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொள்ளவே கூடாது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நோயாளிகளுக்கு நேர்மறையான சிந்தனையும், பயிற்சிகளும் அவசியம்” என்று தெரிவித்தார்.

மற்றொரு எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் மணிஷ், “வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவுக்கு 94க்கு கீழே குறைந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். நோயாளியின் வயது ஆக்சிஜன் அளவு, மற்ற நோய்கள் ஆகியவற்றை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad