3 ஆண்டில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி வழங்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 1, 2021

3 ஆண்டில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி வழங்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து...

3 ஆண்டில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி வழங்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து...

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவர் பிஎஸ்சி கணிதம் படிப்பில் முதல், இரண்டாம் ஆண்டை முடித்துள்ளார். மூன்றாம் ஆண்டில் பிஏ வரலாறு முடித்துள்ளார். இதையடுத்து அவர் கடந்த   1995ல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் பாரதியார் 

பல்கலைக்கழகத்தில் B.Ed., முடித்தார். இதன்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டார். 3ஆண்டில் 2 பாடங்கள் படித்துள்ளதால் ஆசிரியர் தேர்வு வாரியம்  நிராகரித்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது இந்த மனுவை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி விசாரித்தனர். தேர்வாணைய தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி நிர்ணயிக்கப்பட்ட படிப்பிற்கான தகுதி விண்ணப்பதாரர் பெறவில்லை. மூன்றாண்டில் இரண்டு பாடங்களை படித்து உள்ளார். இதை பணிக்கான தகுதியாக கருத முடியாது என வாதிட்டார். இந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தேர்வாணைய தரப்பு வாதம் ஏற்புடையது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad