அப்படியே இந்த 3 விஷயம்; பிரதமருக்கு ஈபிஎஸ் எழுதிய பரபரப்பு கடிதம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. இதையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்திற்கு பிரத்யேக மையங்கள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை தவிர்க்க பேருந்துகள், கார்களில் ஆக்சிஜன் வசதியுடன் மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் குறைகளை தீர்க்க கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சேவையாற்றி வருகிறது. இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
அதில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏராளமானோரை பாதித்துள்ளது. தினசரி 32 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நாளுக்கு நாள் ஏறுமுகமாக உள்ளது. இதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment