கொரோனா 3ம் அலை வரும் - முழு ஊரடங்கு தேவை: எய்ம்ஸ் இயக்குனர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

கொரோனா 3ம் அலை வரும் - முழு ஊரடங்கு தேவை: எய்ம்ஸ் இயக்குனர்

கொரோனா 3ம் அலை வரும் - முழு ஊரடங்கு தேவை: எய்ம்ஸ் இயக்குனர்'இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அதிதீவிரத்துடன் வீசவுள்ளதால் குறைந்தது இரு வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம்' என, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news
இந்தியா மிக விரைவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலையை சந்திக்கவுள்ளது. அதனால் குறைந்தது இரு வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம். மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல் ஆகியவற்றின் மூலமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான ஊரங்கினை அமல் படுத்துவதன் மூலமும் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

இது போல் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கொரோனா 3 ம் அலை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. 3வது அலையை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad