மல்லிகை பூவின் பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

மல்லிகை பூவின் பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

மல்லிகை பூவின் பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?


மல்லிகை பூ பெண்களுக்கு மிகவும் பிடித்த பூவாகும். அது மட்டும்யின்றி இந்த பூ, அதிகளவு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவியாக இருந்த ஒரு பூவாகும்.


உடல் நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 1
கடையில் உணவு வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும், வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலிந்து காணப்படும், சருமத்தில் வெள்ளை திட்டுகள் இருக்கும்.

இந்த பிரச்சனையை சரி செய்ய மல்லிகை பூ மிகவும் பயன்படுகிறது. எனவே 04 மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, தினமும் ஒரு டம்ளர் குடித்துவர இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.

உடல் நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 2
மல்லிகை பூவை நிழலில் காயவைத்து பின்பு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொண்டு தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்துவிடும்.

உடல் நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 3
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் மல்லிகை பூவை ஓரிரண்டு உண்டு வர நோயெதிர்ப்பு சக்தி உயரும்.

உடல் நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 4
தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகை பூவிற்கு உண்டு. எனவே சில மல்லிகை பூவை எடுத்து கையில் கசக்கி, அவற்றை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 5
மல்லிகை பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படும். இந்த எண்ணெய் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 6
சில நேரங்களில் காயங்களின் காரணமாக வீக்கங்கள் ஏற்படலாம். அப்போது அந்த வீக்கத்தில் மல்லிகை பூவை அரைத்து தடவினால் வீக்கங்கள் குறையும்.

உடல் நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 7
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தினமும் மல்லிகை பூவை தலையில் சூடி கொண்டால் போதும் மன அழுத்தம் குறையும், உடல் சூடு தணியும்.

உடல் நலம் பெற மல்லிகை பூவின் பயன்கள்: 8
பூ பயன்கள்: வயிற்று புண் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வாய் புண் இருக்கும், இந்த பிரச்சனையை சரி செய்ய மல்லிகை பூவை சிறிதளவு தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி தினமும் காலை, மாலை என இரு வேளை குடித்து வர, வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad