உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி
இன்றைய பொதுநலம் பதிவில் வீட்டில் இருந்து ஈஸியா செய்யக்கூடிய உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி(potato omelette recipe) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இது மாறி விதவிதமா செய்து குடுத்தீங்கனா அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போ அந்த ரெசிபியை எப்படி செய்யலாம்னு பார்ப்போம்..!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (potato omelette recipe) – தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2 தோல் சீவியது
ஆயில் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முட்டை – 2
கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
மிளகாய் செதில்(chilli flake) – 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (easy breakfast recipe) செய்முறை steps 1:
முதலில் 2 உருளைக்கிழங்கு எடுத்து அதன் மேல் உள்ள தோல்களை சீவிக்கொள்ளவும். பின் உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
நறுக்கி தனியாக வைத்து நன்றாக தண்ணீரில் உருளைக்கிழங்கை கழுவி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (easy breakfast recipe with eggs) செய்முறை steps 2:
அடுத்ததாக 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
பிறகு 1/4 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து வதக்கவும். இதை நன்றாக 7 அல்லது 8 நிமிடம் பொன்னிறம் வரும் அளவுக்கு வதக்கவும்.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (potato omelette recipe) செய்முறை steps 3:
அடுத்து 2 முட்டை எடுத்துக் கொள்ளவும். முட்டையுடன் உப்பு சிறிதளவு, கொத்தமல்லி , நறுக்கிய பச்சை மிளகாய் 2, மிளகாய் செதில்(chilli flake) 1 டீஸ்பூன், எல்லாவற்றையும் நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்.
பிறகு கலந்து வைத்துள்ள முட்டையுடன் நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கை சேர்த்து கொள்ளவும். இதையும் நன்றாக ஒரு ஸ்பூனால் அடித்து கலக்கவும்.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (easy breakfast recipe) செய்முறை steps 4:
இப்போது 1 ஸ்பூன் எண்ணெய் எடுத்து கொள்ளவும். அந்த எண்ணையுடன் கலந்து வைத்துள்ள முட்டை உருளை கிழங்கு கலவையை எண்ணெயில் சேர்க்கவும்.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (easy breakfast recipe with eggs) செய்முறை steps 5:
அடுத்து கலவை சேர்த்த பிறகு வட்ட வடிவில் ஒரு பேனில்(கடாயில்) ரெண்டு பக்கமும் நன்றாக திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
அடுத்து நன்றாக வெந்த பிறகு உருளைக்கிழங்கு முட்டை ரெசிபியை 4 பங்காக கட் பண்ணி எடுத்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி (potato omelette recipe) செய்முறை steps 6:
அவ்ளோதாங்க இந்த உருளை கிழங்கு முட்டை ரெசிபி ரெடி. ஈஸியா இதை வீட்ல எல்லாரும் செஞ்சி சாப்பிடுங்க. இந்த டிப்ஸ் எல்லாருக்கும் புடிக்கும். மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.
No comments:
Post a Comment