கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை?-கமல் ஆதரவாளர்கள் குஷி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 3, 2021

கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை?-கமல் ஆதரவாளர்கள் குஷி!

கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை?-கமல் ஆதரவாளர்கள் குஷி!கமல் ஹாசன் போட்டியிட்டு தோல்வியை தழுவிய கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

இதன் காரணமாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற இத்தொகுதியில் பாஜக வேட்பாளரை வானதி சீனிவாசன் செம டஃப் கொடுத்து, 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் உலக நாயகன் கமலை வென்றார்.
இத்தொகுதியின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பாஜகவின் வானதிக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், இத்தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பில் கோவை தெற்கில் போட்டியிட்ட ராகுல் காந்தி எனும் வேட்பாளர் இதுதொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

அதில், ' வானதி சீனிவாசனின் வெற்றியில் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். எனவே இங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ராகுல் காந்தி தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad