வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு.GO NO : 204 , DATE : 28.05.2021

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை" தமிழக அரசால் இன்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.

ஆணை மேலே 1 - ல் படிக்கப்பட்ட ஆணையில் , 2011 , 2012 , 2013 , 2014 , 2015 மற்றும் 2016 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.HomeKalvinews
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு.
KalvinewsMay 28, 20210 Comments
Facebook
Twitter
1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here

1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - தமிழக அரசு அறிவிப்பு.
 
GO NO : 204 , DATE : 28.05.2021

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை" தமிழக அரசால் இன்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.

ஆணை மேலே 1 - ல் படிக்கப்பட்ட ஆணையில் , 2011 , 2012 , 2013 , 2014 , 2015 மற்றும் 2016 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2 ) மேலே பார்வை 2 - ல் படிக்கப்பட்ட கடிதங்களில் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் , வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை , 2017 , 2018 மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.

3 ) மேற்கண்ட கருத்துருவினை அரசு ஆய்வு செய்து , தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017 , 2018 மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் ( 01.01.2017 முதல் 31.12.2019 வரை ) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு , சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது :

இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள் , அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் .

( ii ) இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும் .

( iii ) மூன்று மாதங்களுக்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

( iv ) 1.1.2017 - க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

No comments:

Post a Comment

Post Top Ad