போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்வு ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்வு !

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்வு !


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தப்பட்டது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், போக்குவரத்துக் கழகத்தில் இம்மாதம் 31ஆம் தேதி முதல் வயது முதிர்வு அடிப்படையில் பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்கள், அவரவர் பிறந்த தேதியின் அடிப்படையில் 60 வயதை பூர்த்தி செய்யும் காலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பணி வாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் ஊழியர்களின் வயது வரம்பை உயர்த்துவது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இதற்கு அதிகாரிகள் கொரோனா பாதிப்பு தான் எல்லாத்துக்கும் காரணம் என தகவல் கூறுகின்றனர். அதாவது, ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களது ஓய்வூதிய பலன்களை அரசு அளிக்கும் நிலை ஏற்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஓய்வூதிய பலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment

Post Top Ad