பெண்களுக்கு கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்
வலது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
உங்களுடைய நன்னடத்தையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் எப்போதும் சந்தோஷமும், அமைதியும் இருக்கும்.
பெண்கள் உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
உள்ளங்கையில் மச்சம் உள்ள பெண்களுக்கு வாய் பேச்சானது அதிகமாக இருக்கும். இதனால் தெரிந்தவர்கள் கூட பகைவராவார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
இடது உள்ளங்கைகளில் மச்சம் உள்ள பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது அன்பாகவும், தன்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
வலது புறங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு வலது புறங்கையில் மச்சம் இருந்தால் மற்றவர்களிடம் இவர்கள் நட்புடன் பேச ஆசைப்படுவார்கள்.
இடது புறங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
இடது புறங்கையில் பெண்களுக்கு மச்சம் இருந்தால் தங்களுடைய நடத்தையினால் பலருடைய பகையை உருவாக்கி கொள்வார்கள்.
வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்கள் வலது கை சுண்டு விரல் பகுதியில் மச்சம் இருந்தால் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதவர்கள் போல் காட்சியளிப்பார்கள்.
வலது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
வலது கை மோதிர விரல் பகுதிகளில் மச்சம் உள்ள பெண்கள் எப்போதும் பிற்காலத்தை நினைத்து எச்சரிக்கையாக செயல்படுபவர்களாக இருப்பார்கள்.
பெண்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
வலது கை ஆள்காட்டி விரல் பகுதியில் மச்சம் உள்ள பெண்கள் மற்றவர்களை எப்போதும் புரிந்துக்கொண்டு செயல்படமாட்டார்கள்.
இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு இடது கை சுண்டு விரலில் மச்சம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறையானது நல்ல வசதி வாய்ப்பாக இருக்கும்.
பெண்கள் இடது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
இடது கை மோதிர விரலில் மச்சம் உள்ள பெண்கள் சாமர்த்தியமாக இல்லாமல் இருந்தால் பொருளாதாரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
இடது கை நடு விரலில் பெண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு இடது கை நடு விரல் பகுதியில் மச்சம் இருந்தால் ஆன்மீக பக்தி அதிகமா இருக்கும்.
இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்கள் இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் மற்றவர்களை எந்த நிலையிலும் ஏமாற்றம் செய்யமாட்டார்கள்.
இடது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு இடது கை கட்டை விரல் பகுதியில் மச்சம் இருந்தால் நேர்மையுடன் இருப்பார்கள்.
No comments:
Post a Comment