இயந்திரத்தின் விலை 30 ஆயிரம் மாத வருமானம் 80 ஆயிரம்..!
இயந்திரம்:-
இந்த தொழில் பொறுத்தவரை நெல் அரைத்து விற்பனை செய்வது அல்லது அரிசியை பாலிஷ் செய்து விற்பனை செய்வது தான். இதற்கு தேவைப்படும் இயந்திரம் மினி ரைஸ் மில் தான்.
இந்த இயந்திரம் மிக குறைந்த விலையில் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த இயந்திரத்தை வாங்கி தொழில் செய்ய விரும்புபவர்கள் இப்போதே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம்.
mini rice mill
இயந்திரத்தை இயக்கம் முறை:-
இந்த மினி ரைஸ் மில் இயந்திரத்தை ஆன் (ON) செய்து, பின் இயந்திரத்தின் மேல் புறத்தில் ஒரு அகன்ற பாத்திரம் போல் இருக்கும் அவற்றில் நெல்லினை கொட்ட வேண்டும். பின் நெல்லை எந்த அளவிற்கு அரைக்க வேண்டும் அல்லது பாலிஷ் போட என்று இயந்திரத்தில் செட்டிங் இருக்கும். அவற்றில் இயந்திரத்தின் ஸ்பீடினை செட் செய்தால் நெல் அரைக்கப்பட்ட அரிசியாக ஒருபக்கத்தில் வெளியே வரும். அதேபோல் மருபக்கத்தில் தவிடு வெளியே வரும். குறிப்பாக இந்த இயந்திரத்தில் ஒரு மணி நேரத்தில் 150 கிலோ நெல்லினை அரைக்கலாம்.
முதலீடு:-
இந்த தொழில் பொறுத்தவரை இயந்திரம் வாங்குவதற்கு மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். எனவே இந்த தொழில் துவங்க குறைந்தபட்சம் நமக்கு 30,000/- தேவைப்படும்.
இடம் வசதி:-
இந்த மினி ரைஸ் மில் இயந்திரத்தை வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய அறையில் மிக குறைந்த மின்சார செலவில் இந்த இயந்திரத்தை இயக்கலாம். அதாவது இந்த இயந்திரத்தை இயக்க வெறும் 220 Voltage போதுமானது.
சந்தைவாய்ப்பு:-
1 அல்லது 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாய்கள் தான் அவர்கள் விளைவித்த நெல்லைப் பெரிய ரைஸ் மில்லிற்கு கொண்டு போய் அரைக்க முடியாது. பெரியப் பெரிய ரைஸ் மில்களில் 150 முதல் 200 மூட்டைகளை ஒரே நேரத்தில் அரைத்தால்தான் ரைஸ் மில்லுக்கு லாபம் கிடைக்கும்.
இதனால் வெறும் 40, 50 மூட்டைகளை மட்டும் போட்டு அரைக்க மாட்டார்கள். எனவே அப்படிப்பட்ட விவசாய்களுக்கு இந்த மினி ரைஸ் மில் இயந்திரத்தில் அரைத்து தரலாம். இதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம்.
வருமானம்:-
ஒரு கிலோ நெல் அரைப்பதற்கு ரூபாய் 1.50 என்று வைத்து கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோ நெல் அரைக்கும் பொழுது அதன் மூலம் நமக்கு 225 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஒரு நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் இயந்திரத்தில் நெல் அரைத்தால் வருமானம் 2700 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 2700 X 30 = 81,000/- வருமானம் கிடைக்கும்.
No comments:
Post a Comment