சுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

சுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்..!

சுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்..!

பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த வடையை செய்து கொடுக்கலாம். வடை என்றால் உளுந்து வடை, மசால் வடை இல்லைங்க பீட்ருட் வடைங்க (beetroot vadai in tamil). பொதுவாக குழந்தைகள் அதிகமா பீட்ருட்டை விரும்புவது இல்லை. எனவே வித்யாசமாக குழந்தைகளுக்கு பீட்ருட்டை வைத்து, சுவையான இந்த வடையை (beetroot vadai in tamil) செய்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி வாங்க பீட்ருட் வடை செய்வது எப்படி (beetroot vadai in tamil) என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்..!

பீட்ருட் வடை செய்ய தேவையான பொருட்கள்:-
துவரம் பருப்பு – 1/4 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 5
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு பொடிதாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கியது – 2
பீட்ருட் – 1 (நைசாக சீவிக்கொள்ளவும்)
கருவேப்பிலை – சிறிதளவு பொடிதாக நறுக்கியது
எண்ணெய் – 1/2 லிட்டர்

பீட்ருட் வடை செய்முறை விளக்கம்:-
பீட்ருட் வடை செய்முறை ஸ்டேப்: 1
முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து அவற்றில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடித்து, ஒரு மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பீட்ருட் வடை செய்முறை ஸ்டேப்: 2
பின்பு ஐந்து காய்ந்த மிளகாய், 1/2 தேக்கரண்டி சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் மிக்சியில் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் ஒன்னிரண்டாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பீட்ருட் வடை செய்முறை ஸ்டேப்: 3
பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


 
அவளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ருட் வடை தயார்.

No comments:

Post a Comment

Post Top Ad