மே மாத மின்சாரக் கட்டணம்: மின்சார வாரியம் புதிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 20, 2021

மே மாத மின்சாரக் கட்டணம்: மின்சார வாரியம் புதிய அறிவிப்பு!

மே மாத மின்சாரக் கட்டணம்: மின்சார வாரியம் புதிய அறிவிப்பு!



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. புதிய அரசு பதவியேற்றதும் கொரோனா தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. “தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான கால அவகாசம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 10.05.21 முதல் 24.05.21 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து 60ஆவது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின் கணக்கீடு செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மே 2019ஆம் ஆண்டில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டு தொகையாக கருதி செலுத்த வேண்டும்.



புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு இல்லாதவர்கள் மே 2021க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியலின்படி, அதாவது மார்ச் 2021-இன் கணக்கீட்டின் படி, மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்த வேண்டிய கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2021 மே மாதத்திற்கான கட்டணம் 2021 ஜூலை மாதம் முறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள். மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad