பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 8, 2021

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!


வாடிக்கையாளர்களை அதிகரிக்க:
வீட்டிலிருந்தே சம்பாதிக்க சுயதொழில் / pengal veetu thozhil: வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்க நீங்கள் தயாரித்து வைத்துள்ள பரிசுப்பொருட்களை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்து அவர்களை கவர செய்யலாம்.

அவ்வாறு செய்வதினால் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து, தங்களிடமே வாடிக்கையாளர்கள் அதிகம் பரிசு பொருட்களை வாங்குவார்கள்.

அதிக பரிசு பொருட்களை தயாரித்து அருகில் உள்ள பேன்சி ஸ்டோர் போன்ற கடைகளில் விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை கவரமுடியும்.

இந்த தொழிலை துவங்குவதற்கு அதிக  முதலீடு தேவைப்படாது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.


 
சுயதொழில்
பெண்களுக்கான சிறு தொழில்கள் தயாரிக்கும் முறை:
பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்கள்: கார்டுபோர்டை ஏ4 சைஸ் அல்லது தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

பசையை தடவி சாக் பவுடரை தூவி நிரப்ப வேண்டும்.


 
சற்று காய்ந்ததும், அதில் வெள்ளை களிமண்ணை தேவையான உருவங்களில் வடிவமைத்து ஒட்ட வைக்க வேண்டும்.

அது கடவுள், பூக்கள், கார்ட்டூன் என எந்த உருவமாகவும் இருக்கலாம்.

அவற்றை மீண்டும் நன்றாக காயவைத்த பின்பு, போர்டு மற்றும் உருவத்தின் மீது எனாமல், பேர்ல், பேப்ரிக் ஆகிய பெயின்ட் வகைகளில் ஒன்றை பிரஷ் மூலம் வண்ணம் பூச வேண்டும்.

எந்தெந்த இடங்களில் எந்த வண்ணம் பூச வேண்டும் என்பது முக்கியம்.

சில இடங்களில் குறிப்பிட்ட நிறங்களை தான் பயன்படுத்த வேண்டும்.

வண்ணம் பூசிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் காயவைத்து, அதன் மீது வார்னிஷ் அடித்து 2 மணி நேரம் காயவைக்க வேண்டும்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.

பெண்களுக்கான சிறு தொழில்கள் – சுயதொழில் முதலீடு:
வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்: பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள் பொறுத்தவரை முதல்கட்ட உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம், அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும்.

சுயதொழில் உற்பத்தி செலவு:
வீட்டில் இருந்தபடியே தொழில் செய்வது எப்படி:  தினசரி 3 மணி நேரத்தில் ஒரு போர்டு வீதம் மாதம் 30 போர்டுகள் தயாரிக்கலாம். இதற்கு தேவையான போர்டு, விலை ரூ.1,200, வெள்ளை களிமண் (எம்.சீல்) ரூ.720, பேர்ல் மற்றும் பேப்ரிக் கலர் பெயின்ட் பாக்ஸ் ரூ2,500, எனாமல் கலர் ரூ.300, சாக் பவுடர் ரூ.1,225, இதர செலவுகள் ரூ.300 என மொத்தம் ரூ.6,245 செலவாகும். உற்பத்தி செலவு கலை வடிவத்திற்கு ஏற்ப மாறும். பெயின்ட், சாக் பவுடர் ஆகியவை ஓரளவு மீதமாகும் வாய்ப்புள்ளது.

சுயதொழில் வருமானம்:
வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்: சிற்ப ஓவிய போர்டு ஒவ்வொன்றையும் குறைந்தபட்சம் ரூ.300க்கு விற்கலாம்.

இதன் மூலம் மாத வருவாய் ரூ.9,000. செலவு போக மாதம் ரூ.3 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

இது தினசரி 3 மணி நேரத்திற்கு கிடைக்கும் உழைப்பு கூலியாக, மாத வருவாயாக எடுத்து கொள்ளலாம்.

கூடுதல் நேரம் ஒதுக்கி தினசரி மேலும் 2 போர்டுகள் செய்தால், மாத லாபம் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை கிடைக்கும்.

மேலும் படைப்பின் அழகு, வசீகரத்திற்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் வரை கூட விலை நிர்ணயித்து விற்கலாம். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

சுயதொழில் சந்தைவாய்ப்பு:
வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வது எப்படி: பரிசு பொருட்களுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்புகள் அதிகம். பிறந்த நாள், திருமணநாள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு பரிசு பொருட்கள் விற்பனை, நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஓவிய சிற்ப பரிசு பொருட்களின் புதுவித வடிவமைப்புகள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

கைத்தொழில் செய்வது எப்படி – பயிற்சிக்கு:
மாவட்ட தலைநகரங்களில் சுயதொழில் பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மகளிர் குழு அமைப்புகள், பரிசு பொருட்களுக்கான பயிற்சியை வழங்குகிறது.

தனிப்பட்ட முறையிலும் சிலர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓவியம், கலை உணர்வு இருந்தால் 2 வாரத்தில் கற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad