மின்மினிப்பூச்சி எப்படி மின்னுகிறது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

மின்மினிப்பூச்சி எப்படி மின்னுகிறது?

மின்மினிப்பூச்சி எப்படி மின்னுகிறது?


மின்மினிப்பூச்சிகள் பறக்கும் புழு இனத்தை சேர்ந்தவை. இப்பூச்சிகளின் அடிவயிற்றில் ஒளியை உண்டாக்கும் உறுப்பு அமைந்துள்ளது.


 
இந்த உறுப்பு நரம்புகளால் இயங்கக்கூடியது.இந்த உறுப்பில் லூஸிஃபெரின், லூஸிஃபெரல்
என இரண்டு வகையான பொருட்கள் உள்ளன.

லூசிஃபெரின் என்ற பொருள் காற்றில்
உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து ஒளியை உண்டாக்குகிறது.
மின்மினிப்பூச்சியின் உடலில் உள்ள
லூஸிஃபெரின் ஒளியை உண்டாக்குகிறது என்றால், லூஸி ஃபெரஸ் என்ற பொருள் இந்த
இயக்கத்தை நீண்ட நேரத்திற்கு ஊக்குவிக்கிறது.

இதனால் ஒளியை நம்மால் நீண்ட நேரத்திற்கு பார்க்க முடியும். மின்மினிப்பூச்சியின் ஒளியில்
வெப்பம் இருப்பதில்லை. வெப்பம் இல்லாமல் வெளிப்படும் ஒளிக்கு ‘பயோலூமினி சென்ஸ்' என பெயர்.

மின்மினிப்பூச்சிகளிடமிருந்து வெளிப்படும் ஒளி மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இனக்கவர்ச்சிக்காக ஒன்றை ஒன்று
கவருவதற்காக இப்பூச்சிகள் மின்னுகின்றன என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இதன் ஒளியை கண்டு எதிரிகள் அச்சம் கொள்வதால்
பாதுகாப்புக்காக இவை மின்னுகின்றன என்றும்
சிலர் கூறுகின்றனர். 

எதுவாக இருந்தாலும் இந்த
ஒளி நம்மை கவரக்கூடியதாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad