தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு?
தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு, வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசியக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிலவரம் குறித்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவ்வப்போது சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை, வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment