பிளஸ் டூ தேர்வு ஆன்லைனில் நடக்குமா? உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

பிளஸ் டூ தேர்வு ஆன்லைனில் நடக்குமா? உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவு என்ன?

பிளஸ் டூ தேர்வு ஆன்லைனில் நடக்குமா? உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவு என்ன?


கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது.

கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு ஆன்லைனிலேயே பாடங்களை கற்றுவந்தனர். அடுத்த கல்வி ஆண்டும் இதே நிலை நீடிக்குமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

பள்ளிப் படிப்பை முடித்து மேற்படிப்பு செல்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வு முக்கியம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் 12ஆம் வகுப்பு தேர்வை மட்டும் நடத்திவிட ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், செப்டம்பர் மாதம் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரமுடியாத மாணவர்களுக்கு 25 நாள்கள் கழித்து மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 300 பேர் நேரடித் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

“சுகாதார நெருக்கடி நிலவும் சூழலில், மாணவர்களை நேரில் வரச் செய்து பொதுத் தேர்வுகளை நடத்துவது பேரழிவை ஏற்படுத்தும் முடிவாக இருக்கும். மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் அல்லது மாற்று மதிப்பீடு உள்ளிட்ட பிற எந்த முறைகள் மூலமாக வேண்டுமானாலும் மதிப்பிடப்படத் தயாராக உள்ளோம். உச்ச நீதிமன்றம் இதுகுறித்துத் தானாகவே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொரோனா காலகட்டத்தில் நேரடித் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று கூறியிருந்தார். இருப்பினும் தேர்வு எப்போது நடைபெறும், எப்படி தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad