அரசு பள்ளிகளும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும்.. அமைச்சர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

அரசு பள்ளிகளும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும்.. அமைச்சர் அறிவிப்பு!

அரசு பள்ளிகளும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும்.. அமைச்சர் அறிவிப்பு!


கிராம புறங்களில் அரசு பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பாரபட்சம் காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டம் திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் இருக்கை, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய

அமைச்சர் மெய்யநாதன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவையான தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கு ஏற்ப கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் மாவட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கொரோனா தடுப்பு பணியில் புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது எனவும், பேரிடர் காலத்தில் அரசுடன் சேர்ந்து பயணிப்பது அவர்களின் கடமை எனவும், எங்களுடன் சேர்ந்து வந்தால் பயணிக்க தயார் என்று தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யும் பணிகளை ஆளுங்கட்சி தடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad