மறு அறிவிப்பு வரும் வரை; தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

மறு அறிவிப்பு வரும் வரை; தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

மறு அறிவிப்பு வரும் வரை; தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலித் தொடரை உடைக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒருவார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபரே இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி எடுத்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் மாணவர்களும், இளைஞர்களும் வீடுகளில் முடங்கியிருக்க முடியாமல் அருகிலுள்ள பள்ளி மைதானங்களில் அவ்வப்போது விளையாடச் சென்று விடுகின்றனர்.

அதாவது கிராமப்புறங்கள் மற்றும் சில நகர்ப்புறங்களில் அரசு பள்ளி வளாகங்களில் மாணவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் கூடி காலை நடைபயிற்சியும், மாலையில் பல்வேறு விளையாட்டுகளிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது பலர் ஒரே இடத்தில் கூடும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய சூழல் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் அமைகிறது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. எனவே பள்ளிகளில் மாணவர்களோ, இளைஞர்களோ

கூடி விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அத்தியாவசிய அலுவலகங்கள் தவிர மற்ற அரசு துறை அலுவலகங்கள் செயல்பட அனுமதியில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி வளாகங்களுக்குள் யாரும் வராத வகையில் பூட்டி வைக்க வேண்டும்.

இதனை மீறி யாராவது செயல்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே மாணவர்கள், இளைஞர்கள் விளையாடச் செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதே நல்லது. நண்பர்கள் வீட்டிற்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad