ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 3, 2021

ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு!

ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு!தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் புதுப்புது உச்சங்களை எட்டும் நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வெளியான ஊரடங்கு அறிவிப்பில் மே 6ஆம் தேதி முதல் காய்கறி, பலசரக்கு, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும் பிற கடைகள் மே 20ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சில பணிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் என அந்த அறிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad