ஊரடங்கு நீட்டிப்பு எத்தனை நாள்கள்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதுப்புது உச்சத்தை எட்டி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்தபடியே உள்ளது.
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு மே 24ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
நாளை காலை 10 மணிக்கு மருத்துவ வல்லுநர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் பாதிப்பின் திவீரம் எவ்வாறு உள்ளது, கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பலனளித்ததா, மேலும் என்ன கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அதன்பின்னர் 11.30 மணிக்கு சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவிடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment