ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு: தமிழக அரசு விரைவில் முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 20, 2021

ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு: தமிழக அரசு விரைவில் முடிவு!

ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு: தமிழக அரசு விரைவில் முடிவு!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனாவில் தாக்கம் சற்றி குறையத் தொடங்கியதும், அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால், கொரோனாவால் சில மாணவர்கள், ஆசியர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர இதர மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே இந்த ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் கல்வி நிறுவனங்கள் கொரோனாவை காரணம் காட்டி, சரியாக சம்பளம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதுஒருபுறமிருக்க அரசுப் பள்ளி மாணவர்கள் பலரிடம் ஸ்மார்ட்போன், இண்டர்னெட் போன்ற வசதிகள் இல்லாத நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதில்லை. கல்வித் தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுதவிர, 10, 11, 12ஆம் வகுப்புகளை தவிர இதர வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவது இல்லை. ஆனால், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முழு சம்பளமும் அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்கள் சில கொரோனாவை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்து விட்டன. அத்துடன், பணியில் இருந்து தூக்கி விடுவோம் என்ற மிரட்டல்கள் மூலம் பணியாளர்களை கசக்கி பிழிந்து அதிக நேரம் வேலை வாங்கி வருகின்றன. ஆனாலும், அவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படுகிறது. அத்துடன், ஆசிரியர்களின் சம்பளத்தை விட முன்களப் பணியாளர்கள் சிலரின் சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் முன்கள அரசு ஊழியர்களை தவிர இதர அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்து வருகின்றன.



இந்த நிலையில், திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை, சத்திரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல்கள் வருகின்றன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad