நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 27, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


பொதுவாக அனைவரது குழப்பமே இதுதான். அதாவது நன்றாகத்தான் இருப்போம் திடீர் என்று உடல் நல குறைவு ஏற்படும், என்ன காரணம் என்றாலும் தெரியாது.

சிலருக்கு பருவமாற்றத்தின் காரணமாக கூட உடல் நலகுறைவு ஏற்படுகிறது. இவற்றின் முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (immunity power) குறைவின் காரணமாகவே இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி in English – Immunity என்று கூறுவர்.

எனவே இதை நாம் சரி செய்ய முறையான உணவு முறைகளை பின்பற்றினாலே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (increase immunity) முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் இருந்தா கண்டிப்பாக நாங்க சொல்லியுள்ள சில விஷயங்களை தினமும் நீங்க கடைப்பிடித்து வந்தாலே போதும் இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.


வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (increase immunity) தன்மை வாய்ந்தது.

அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது.

கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

இவற்றை நாம் அதிகமாக உணவில் எடுத்து கொண்டோம் என்றால் அதிகளவு ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு அதிகளவு வலிமையையும் அள்ளித்தருகிறது.

இதனுடன் தினமும் 5 பாதாம் பருப்பும் சாப்பிட்டால் அதிக வலிமை பெறலாம்

No comments:

Post a Comment

Post Top Ad