சசிகலா - ஓபிஎஸ் புதிய கூட்டணி? தினகரன் மகள் திருமணத்தில் இருக்கு ஒரு கச்சேரி!
தினகரன் மகள் திருமணத்தில் மீண்டும் ஒரு அரசியல் பட்டாசு வெடிக்கும் என்று கூறுகிறார்கள். அதிமுகவுக்குள் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அந்நிகழ்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில் அதன் சாத்தியங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்குள் வீசத் தொடங்கிய புயல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஓபிஎஸ் ஆரம்பித்த தர்ம்யுத்தம், சசிகலா பொதுச் செயலாளர் ஆனது, பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி முதல்வரானது, டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் எண்ட்ரி, இரட்டை இலை முடக்கம், சசிகலா - தினகரன் வெளியேற்றம், ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது, சசிகலா விடுதலை, தற்போது தேர்தலுக்கு பின்னர் இபிஎஸ் எதிர்கட்சித் தலைவரானது என தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் அதிமுகவில் பெரும் பஞ்சாயத்தே நடைபெற்று வந்தது, தற்போதும் நடைபெற்று வருகிறது.
தினகரன் தலைமையிலான அமமுக தேர்தலில் வெற்றியைப் பெறாவிட்டாலும் அதிமுக வாக்குகளை பல தொகுதிகளில் பிரித்தது. அதிமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் வெற்றியை பறிகொடுத்த தொகுதிகளில் அமமுக கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றவாது இடத்தை பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர ஓபிஎஸ் பல முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
No comments:
Post a Comment