பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.. கமல்ஹாசன் வலியுறுத்தல்!
தமிழகம், கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தேர்தல் நடைபெற்ற காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும்
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா முதல் அலையில் மூழ்கிய பொருளாதாரம் மீளாத நிலையில் மக்கள் வேலையிழப்பு, மருத்துவ செலவினங்கள் என அல்லற்பட்டு வருகின்றனர். இரண்டாவது அலை ஒரு சுனாமி போல தாக்கி மக்கள் வாழ்வை புரட்டி போட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருவது வேதனையளிக்கிறது. சாமான்ய மக்கள் மீது மேலும் சுமை ஏற்றப்படுகிறது. எரிபொருட்கள் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment