கங்கை நதிக்கரையில் பிணங்கள்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி!
சில தினங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தில் கங்கை நதியில் பல
சடலங்கள் மிதந்து வருவது கண்டறியப்பட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சடலங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து அடித்து வரப்பட்டவை என பீஹார் அரசு தெரிவித்தது. மொத்தம் 71 சடலங்கள் மீட்கப்பட்டன. அவற்றுக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதி அருகே பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பெரும்பாலான சடலங்கள் காவி உடையில் மூடப்பட்டுள்ளது தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட இடம் முக்கியமான தகன ஸ்தலம். புதைக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா நோயாளிகள் என உறுதியாகவில்லை. ஆற்றுக்கு அருகே தகனம் செய்யாமல் சிலர் புதைத்துவிடுகின்றனர்.
No comments:
Post a Comment