WhatsApp பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்ஆப் புதிய தனிநபர் கொள்கை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாட்ஸ்ஆப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது. அந்த கொள்கை மூலமாக பயனாளர்களின் விவரங்களை தெரிந்து கொண்டு அதனை பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸ்ஆப் சேவைகள் மே 15 ஆம் தேதிக்கு மேல் நிறுத்தப்படாது. அதற்கு பதிலாக பல வசதிகள் நிறுத்தப்படும். இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
திய தனிநபர் கொள்கையை ஏற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து நினைவூட்டல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும். இதன்படி பயனாளர்கள் இன்கமிங் சேவைகளை பயன்படுத்த முடியாது. அவுட்கமிங் சேவைகள், வீடியோ கால்கள் பயன்படுத்தலாம்.
நோட்டிபிகேஷன் Enable செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து பதிலளிக்க முடியும். ஆனால் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அனைத்து சேவைகளும் படிப்படியாக நிறுத்தப்படும். இந்த நினைவூட்டல் அறிவிப்பு ஒரே நேரத்தில் அனைத்து பயனர்களுக்கும் வராது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment