இந்தியாவுக்கு வெண்டிலேட்டர் அனுப்புறோம்.. பிரிட்டன் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 3, 2021

இந்தியாவுக்கு வெண்டிலேட்டர் அனுப்புறோம்.. பிரிட்டன் அறிவிப்பு!

இந்தியாவுக்கு வெண்டிலேட்டர் அனுப்புறோம்.. பிரிட்டன் அறிவிப்பு!


இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.92 லட்சத்துக்கு மேலானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 3,689 பேர் பலியாகியுள்ளனர்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை என பல பிரச்சினைகளால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.

ஏற்கெனவே பல்வேறு உலக நாடுகள் தங்களால் இயன்ற உதவியை இந்தியாவுக்கு செய்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு 1000 வெண்டிலேட்டர்களை அனுப்புவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்தியாவுக்கு 495 ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர்களையும், 200 வெண்டிலேட்டர்களையும் பிரிட்டன் அனுப்பியுள்ளது. இதுபோக 1000 வெண்டிலேட்டர்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad