ஆப்பிள் பழம் பற்றி அறிவோம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

ஆப்பிள் பழம் பற்றி அறிவோம்

ஆப்பிள் பழம் பற்றி அறிவோம்


அரத்திப்பழம் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.

மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.

ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.


 *ஆப்பிள் மரம்


 
ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5–12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.


தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் இரகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அனேகமாக, தோடை வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும் எனலாம். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.

ஆப்பிள் என்ற சொல், பழைய ஆங்கிலச் சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது.


 சீமையிலந்தம்பழம் (ஆப்பிள்) இரகங்கள்

பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித இரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்கக் குளிர் அவசியம் என்பதால், பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்கா. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். ஆப்பிள் கலப்பின விருத்தியில் பின்வரும் குணங்கள் மேம்படுத்தப் படுகின்றன: நிறமுள்ள வெளிப்புறம், கடினத்தோல் இல்லாமை, அதிகநாள் கெடாதிருத்தல், அதிக விளைச்சல், நோய் எதிர்ப்பு, நல்ல ஆப்பிள் வடிவம், நீளமான காம்பு (பழத்தின் மேற்புறம் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக) மற்றும் விரும்பப்படும் சுவை, மணம்.

 இரகங்கள் 


 
பெரும்பாலும் வித்தியாசமான வடிவமும், கடினத்தோலும், பல்வேறு நிறங்களும் கொண்டிருந்தன. இவற்றில் பல, நல்ல சுவைமணம் கொண்டிருப்பினும், குறைந்த விளைச்சல், நோய் எதிர்ப்பின்மை போன்ற குணங்கள் இல்லாமல் இருக்கும். இருப்பினும், இவற்றுள் சில இன்றும் விவசாயிகள் மிகச்சிலரால் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பற்பல வேறுபட்ட சுவைமணம் கொண்ட ஆப்பிள்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன.

பெரும்பாலான ஆப்பிள்கள் பழமாகச் சாப்பிட உகந்தவை; சில சமைத்துச் சாப்பிடவும், சிடர் பானம் தயாரிக்கவும் உகந்தவை. சிடர் வகை ஆப்பிள்கள், பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை உள்ளவை; ஆனால், இவை சிடர் பானத்திற்கு நல்ல சுவைமணம் தருகின்றன.


 *உடல்நலப் பலன்கள்

தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.

ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த 'ரெட் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004).

ஆப்பிள்கள்களைக் கொண்டு, ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad