​TN RAINS நான்கு நாள்களுக்கு கனமழை: புயல் வருது எச்சரிக்கையா இருங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 13, 2021

​TN RAINS நான்கு நாள்களுக்கு கனமழை: புயல் வருது எச்சரிக்கையா இருங்க!

​TN RAINS நான்கு நாள்களுக்கு கனமழை: புயல் வருது எச்சரிக்கையா இருங்க!

அரபிக்கடலில் புதிதாதக உருவாகும் புயலால் தமிழகத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 4 நாள்களுக்கு கேரளம், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின்னர் மே 16ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. உருவாகும் புயலுக்கு தாக்டே என பெயரிடப்பட்டுள்ளது.



தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

புயல் உருவாக உள்ள நிலையில் கேரளாவில் சனிக்கிழமை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad