கொரோனா தொற்று - டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு - TNPSC
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு சில குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற சேவைகளுக்கு ஊரடங்கில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment