சேலம் ஊரடங்கு ரூ 1, 34, 300 வசூல் செய்து போலீசார் கரார்: மக்களே உஷார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

சேலம் ஊரடங்கு ரூ 1, 34, 300 வசூல் செய்து போலீசார் கரார்: மக்களே உஷார்!

சேலம் ஊரடங்கு ரூ 1, 34, 300 வசூல் செய்து போலீசார் கரார்: மக்களே உஷார்!



கொரோனா 2ஆவது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஜீன் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கைத் தமிழக அரசு அமல் படுத்தியுள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களைப் பிடித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படி வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார் உரிய அபராதம் விதித்து, அதைத் திருப்பி கொடுத்து வருகின்றனர்.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்ல தடை விதித்த போலீசார், சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு 500 ரூபாய் வீதம் 240 வாகனங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.



அதேபோல் முகக் கவசம் இல்லாமல் சென்ற 64 பேருக்கு 200 ரூபாய் வீதம் 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமும் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாத 3 நபர்களுக்கு 500 ரூபாய் வீதம் ஆயிரத்து 500 என மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் 78 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad