முக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

முக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்

முக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்


Turmeric And Honey Face Pack – தேவையான பொருட்கள்:
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  • தேன் – 3 டீஸ்பூன் 
செய்முறை:


முதலில் சுத்தமான பவுலில் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் தூளுடன் 3 டீஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்துக்கொள்ளவும்.

மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்த பிறகு இரண்டையும் நன்றாக கலந்துக்கொள்ளவும்.


இரண்டையும் நன்றாக கலந்த பிறகு சருமத்தில் இப்போது அப்ளை செய்யவேண்டும். இந்த டிப்ஸை தினமும் தவறாமல் முகத்தில் தடவிவர வேண்டும்.

சருமத்திற்கு கிடைக்கும் மாற்றம்:


மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும். அதோடு மஞ்சள் மற்றும் தேனானது உடல் தோலின் நிறத்தை மேம்படுத்த செய்கிறது.

சருமத்தினை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும். சருமத்தில் உள்ள கறைகளை நீக்கிவிடும்.

Aloe Vera And Honey Face Pack – தேவையான பொருட்கள்:
  • தேன் – 2 டீஸ்பூன் 
  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன் 
செய்முறை:

சருமத்தில் நிரந்தரமாக பருக்கள் மறைவதற்கு ஒரு பவுலில் 2 டீஸ்பூன் அளவிற்கு தேனை எடுத்துக்கொள்ளவும். தேனுடன் 1 டீஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து சேர்த்துக்கொள்ளவும்.

 

இப்போது பவுலில் சேர்த்த தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்றாக கலந்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad