கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை

கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை


கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Snacks Recipes) – தேவையான பொருட்கள்:
  • உருண்டை வெல்லம் – 1/3 கப் 
  • தண்ணீர் – 1/3 கப் 
  • நெய் – 1 ஸ்பூன் 
  •  வாழைப்பழம் – 3 (நறுக்கியது)
  • தேங்காய் துருவல் – 1/2 கப் 
  • கோதுமை மாவு – 1/3 கப் 
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் 
கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 1:

Sweet Recipes in Tamil step: 1 முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் உருண்டை வெல்லம்  1/3 கப்  அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும். பின் தண்ணீர்  1/3 கப் ஊற்றி நன்றாக கரைய வைக்கவும். வெள்ளம் நன்றாக கரைந்த பின் அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம். பின் வெல்லம் நீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 2:

Sweet Recipes in Tamil step: 2 அடுத்து வாணலியில் நெய் 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் 3 நறுக்கிய வாழைப்பழத்தை நெய்யில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும். மாநிறம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போ எடுத்து வைத்த வெல்ல தண்ணீரில் செய்து வைத்துள்ள தேங்காய் துருவல் கலவையை சேர்க்கவும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 3:

Sweet Recipes in Tamil step: 3 அடுத்ததாக 1/3 கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக்கொள்ளவும். கோதுமை மாவை சேர்த்த பின் நன்றாக மிக்ஸ் பண்ணிக்கவும். அதனுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் இதனுடன் நட்ஸ் கூட சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதான் இந்த மாவு ரெடிங்க.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 4:

Sweet Recipes in Tamil step: 4 இப்பொழுது தனியாக கேக் செய்ற அளவுக்கு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். அந்த பேனில் (pan) மாவு ஒட்டாமல் வருவதற்கு நெய் கொஞ்சம் தடவி கொள்ளலாம். நெய் தடவிய பிறகு ரெடி பண்ண மாவை இந்த பாத்திரத்தில் கொட்டவும். பின், ஒரு இட்லீ பாத்திரத்தில் 1 டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 5:

Sweet Recipes in Tamil step: 5 அந்த இட்லி பாத்திரத்தில் உள்ளே ஒரு வட்ட வடிவில் ஸ்டாண்ட்(stand) வைத்து கொள்ளவும். அந்த ஸ்டாண்ட் மேல் ஒரு பாத்திரத்தில் கொட்டிய மாவை இதன் மேல் வைக்கவும். அடுத்து மூடி போட்டு மூடிவிட்டு 10 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு எடுக்க வேண்டும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 6:

Sweet Recipes in Tamil step: 6 அவ்ளோதாங்க இந்த கோதுமை மாவு கேக் ரெடிங்க. இந்த வட்ட வடிவில் உள்ள கேக்கை ஒரு தனி தட்டில் கொட்டி உங்களுக்கு புடித்த மாதிரி கட் பண்ணிக்கொள்ளலாம். இந்த கேக் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்பவே புடிக்கும். மறக்காம வீட்ல ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.

No comments:

Post a Comment

Post Top Ad