ரூ.12/- செலுத்தினால் போதும்..! 4,00,000/- பெற புதிய திட்டம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 16, 2021

ரூ.12/- செலுத்தினால் போதும்..! 4,00,000/- பெற புதிய திட்டம்..!

ரூ.12/- செலுத்தினால் போதும்..! 4,00,000/- பெற புதிய திட்டம்


வயது தகுதி:
இந்த மத்திய அரசின் திட்டத்தில் விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 70 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

வருடம் செலுத்த வேண்டிய தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு ரூ.12/- செலுத்தினால் போதும்.

திட்டத்தின் சிறப்பு:
ஏதேனும் விபத்துக்கள் மூலம் இறக்க நேரிட்டாலோ அவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் கொடுக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் விபத்துகளில் உடல் உறுப்புகள் இழந்தவர்களுக்கு ரூ.1-2 லட்சம் வரையிலும் தொகை வழங்கப்படுகிறது.

குறிப்பு:
உடலில் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக இழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்படுகிறது. அதே உடல் உறுப்புகள் இரண்டாக இழந்தால் 2 லட்சம் வரை வழங்குகிறார்கள்.


வயது தகுதி:
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 50 வரையுள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

திட்டத்தின் சிறப்பு:
இந்த திட்டத்தில் இயற்கை மூலம் அல்லது எந்த முறையில் இறந்தவர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வரையிலும் கொடுக்கப்படுகிறது.

வருடம் செலுத்த வேண்டிய தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு ரூ.330/- செலுத்தினால் போதும். விருப்பம் உள்ளவர்கள் இரண்டு திட்டத்திலும் சேர்ந்துக்கொள்ளலாம்.

ஒரு நபர் ரூ.12/- திட்டத்திலும், ரூ.330/- திட்டத்திலும் சேரலாம்.

பணம் கட்டும் முறை:
உங்களுடைய சேமிப்பு கணக்கில் இருந்து அவர்களே நேரடியாக எடுத்துக்கொள்வார்கள். பணம் எடுக்கும் கணக்கானது 1 வருடத்திற்கு ஜூன் 1-ல் இருந்து மே-31 கணக்கின் படி தொகையினை எடுப்பார்கள்.

பணம் சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்கும் போது தங்களுக்கு குறுஞ்செய்தியின் மூலம் தெரிவிப்பார்கள்.

முடிவடையும் காலம்:
PMSBY திட்டத்தில் தங்களுக்கு 70 வயது வரை இந்த திட்டத்தில் பணம் கட்டிவர வேண்டும்.

PMJJBY திட்டத்தில் தங்களுக்கு 55 வயது வரை திட்டத்தில் பணம் செலுத்தி வர வேண்டும்.

குறிப்பாக உங்களுடைய வங்கி கணக்கில் போதுமான தொகை இல்லையென்றாலும் அந்த கணக்கானது close ஆகிவிடும்.

பணம் எப்படி பெறுவது:
எந்த வங்கியில் அப்ளை செய்துளீர்களோ அந்த வங்கி அலுவலரிடம் விவரத்தினை கேட்டால் அவர்களே முடித்து கொடுப்பார்கள்.

கட்டிய பணம் திரும்ப பெற முடியாது:
இந்த திட்டத்தில் மிகவும் குறைவான தொகை மற்றும் நிறைய சலுகைகள் கொடுப்பதால் கட்டிய பணம் திரும்ப கிடைக்காது.

திட்டத்தில் சேருவதற்கு:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்த வங்கியில் சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று விவரத்தினை நிரப்பி கொடுக்க வேண்டும். Net Banking வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

கணக்கீடு:
இந்த இரண்டு திட்டத்திலும் சேர்த்து ஆகும் தொகை 330+12=342.

ஒரு நபர் இந்த திட்டம் 1ல், 18 வயது ஆகும்போது சேருகிறார்கள் என்றால் 70 வயது வரையிலும் இடைப்பட்ட காலமானது 52 வருடமாகும்.

அந்த நபர் 52 வருடத்திற்கு மொத்தமாக கட்டிய தொகை ரூ.624/-. அவர்களுக்கு இடையில் ஏதேனும் விபத்துக்கள் நேரிட்டால் இந்த திட்டத்தில் மூலம் நிறைய பயன்பெறலாம்.

இந்த மத்திய அரசின் இரண்டு திட்டத்திலும் சேர்ந்துக்கொள்வது மிகவும் நல்லது. முடியாதவர்கள் ரூ.12/- திட்டத்திலாவது சேர்ந்துக்கொள்ளுங்கள்.

ரூ.330/- திட்டத்தில் கணக்கீடு 18 வயது முதல் 55 வயது வரை கட்டும் தொகை ரூ.12,000-ற்குள் வரும். எதிர்காலத்தில் அனைவருக்கும் பயன்படக்கூடிய மிக சிறந்த திட்டம். அனைவரும் சேர்ந்து பயன்பெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Post Top Ad