18ஆம் நூற்றாண்டின் கண்ணாடி மாளிகை.. 70 ஆண்டுகளுக்கு பின் மீட்ட வனத்துறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

18ஆம் நூற்றாண்டின் கண்ணாடி மாளிகை.. 70 ஆண்டுகளுக்கு பின் மீட்ட வனத்துறை!

18ஆம் நூற்றாண்டின் கண்ணாடி மாளிகை.. 70 ஆண்டுகளுக்கு பின் மீட்ட வனத்துறை!


ஆரணியில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்ததை தொடர்ந்து, 70ஆண்டுகளுக்கு பின்பு வனத்துறையினர் மீட்டுள்ளனர். கண்ணாடி மாளிகையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் 1806ஆம் ஆண்டு திருமலை ராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கட்டிய இந்த கண்ணாடி மாளிகை தற்போது 215 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

மேலும் கடந்த 70ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுபாட்டில் இயங்கி வந்தது. சமீப காலமாக ஆரணி பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் இந்த மாளிகையில் அமர்ந்து மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது வனத்துறை அதிகாரி அருண்லால், வனச் சரக அலுவலர் மோகனகுமார் ஆகியோர் பூசிமலைகுப்பம் காப்பு காட்டில் ஆய்வு செய்த போது ஜாகிர்தாரரால் கட்டபட்ட கண்ணாடி மாளிகை இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு வனத்துறையினர் சுமார் 70ஆண்டுகளுக்கு பின்பு கண்ணாடி மாளிகையை மீட்டெடுத்தனர். மேலும் ஆரணி சரக வனத்துறையினர் கண்ணாடி மாளிகையை சுற்றி வேலி அமைத்து, வனத்துறைக்கு சொந்தமான இடமென அறிவிப்பு பலாகை வைத்துள்ளனர்.

கண்ணாடி மாளிகை மீட்டெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளித்தாலும், தமிழக அரசு உடனடியாக தலையீட்டு இந்த கண்ணாடி மாளிகையை சுற்றுலா தலமாக மாற்றியமைத்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad