ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000.. இந்த தேதியில் டோக்கன் கிடைக்கும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 5, 2021

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000.. இந்த தேதியில் டோக்கன் கிடைக்கும்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000.. இந்த தேதியில் டோக்கன் கிடைக்கும்!



கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் கடந்த மே மாதமே வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணையாக இம்மாதம் 2000 ரூபாய் வழங்கவும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் நாள் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

2000 ரூபாய் பணம், மளிகைப் பொருள் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த டோக்கன்களின் அடிப்படையில் 2000 ரூபாயும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் ஜூன் 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். 2000 ரூபாயும், மளிகைப் பொருள் தொகுப்பும் ஒரே நேரத்தில் பெற்றுச்செல்லும் வகையில் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி இரண்டாம் தவணை தொகை 2000 ரூபாயும், மளிகைப் பொருள் தொகுப்பும் வழங்கப்படும் என்பதால், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் ரேஷன் கடையில் எவ்வித சிரமமுமின்றி பெற்றுச்செல்லலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2000 ரூபாய், மளிகைப் பொருள் தொகுப்பு ஒதுக்கப்படுவதால், குறித்த நாள் மற்றும் நேரத்தில் பெற இயலாதவர்கள் வரும் மாதம் அவர்களுக்கான மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.



ரேஷன் கடைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad