தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; எந்தெந்த துறைகளில்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; எந்தெந்த துறைகளில்?

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; எந்தெந்த துறைகளில்?


தமிழகத்தில் புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

* சென்னை விஜிலன்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக பணியாற்றி வந்த ஆர்.பொன்னி ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை சிலை தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மதுரை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்த சுஜித் குமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை என்.ஐ.பி சிஐடி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு சிறப்பு போலீஸ் VII பட்டாலியன், பொச்சாம்பள்ளி கமாண்டண்டாக இருந்த ஜி.சம்பத் குமார் மாற்றப்பட்டு சென்னை துணை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை சிவில் சப்ளைஸ் சிஐடி எஸ்.பி எஸ்.சாந்தி ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* திருநெல்வேலி நகர காவல்துறை, க்ரைம், போக்குவரத்து துணை ஆணையர் டி.மகேஷ் குமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சேலம் மண்டல அமலாக்கத்துறை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* விருதுநகர் மாவட்ட எஸ்.பி பி.பெருமாள் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை அமலாக்கத்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

* ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆர்.சிவகுமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் பொது நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மதுரை நகர காவல்துறை, போக்குவரத்து துணை ஆணையர் கே.சுகுமாரன் மாற்றப்பட்டு, மரைன் பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் எஸ்.பி டி.சண்முகப்பிரியா மாற்றப்பட்டு, சென்னை சைபர் கிரைம் எஸ்.பி-1ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad