வால்பாறையில் 2 நாளாகப் படுத்தே கிடக்கும் காட்டெருமை: அதைக் கண்காணிக்க வனத்துறை தீவிரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 24, 2021

வால்பாறையில் 2 நாளாகப் படுத்தே கிடக்கும் காட்டெருமை: அதைக் கண்காணிக்க வனத்துறை தீவிரம்!

வால்பாறையில் 2 நாளாகப் படுத்தே கிடக்கும் காட்டெருமை: அதைக் கண்காணிக்க வனத்துறை தீவிரம்!


கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள ஸ்டான்மோர் அருகே சவாராங்காடு எஸ்டேட் தேயிலைத் தோட்டம் பகுதியில் ஒரு காட்டெருமை உடல் நலக்குறைவால் எழுந்து நடமாடமுடியாமல் படுத்துக்கிடந்துள்ளது.

இது பற்றிய தகவலைச் சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு அப்பகுதியைக் கடந்த பொது மக்கள் கொடுத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் உடல்நலக்குறைவால் படுத்திருந்த காட்டெருமையைச் சோதனை செய்தனர்.

அதில் அந்த காட்டெருமை வயது மூப்பின் காரணமாக உடல் நலத்தில்க் குறைவு ஏற்பட்டுள்ளது, தெரியவந்தது. இதை அறிந்து அதுபற்றிய தகவலை கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட காட்டெருமையை வனத்துறையினர் தொடர்ந்து தீவரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்த காட்டெருமை கடந்த இரண்டு தினங்களாக அதே பகுதியிலிருந்ததை அவ்வழியாகச்சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad