அமலுக்கு வரும் புதிய தளர்வுகள்; மாநில அரசுக்கு இப்படியொரு சிக்கல்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தின் சராசரி 2.6 சதவீதமாக இருக்கிறது. 7 மாவட்டங்களில் பாசிடிவ் விகிதம் 5 முதல் 10 சதவீதமாக உள்ளன. அதாவது, மைசூருவில் 9.3 சதவீதம், குடகில் 8.1 சதவீதம், தக்ஷின கன்னடா 7.3 சதவீதம், ஹாசன் 6.5 சதவீதம், தாவனகரே 5.9 சதவீதம், சிக்கமகளூரு 5.4 சதவீதம், சாம்ராஜ் நகர் 5.2 சதவீதமாக இருக்கின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் கீழ் இருந்தால் அங்கு ஊரடங்கை தளர்த்தலாம்.
எனவே புதிய தளர்வுகளை அறிவிக்க மாநில அரசு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி வெளியிடப்பட்ட தளர்வுகளின் படி, 16 மாவட்டங்களில்.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம். உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்கலாம். பெங்களூருவில் BMTC பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று கூறப்பட்டது.
No comments:
Post a Comment