கோவாக்சின் தடுப்பூசி போட்டால் செல்லாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க?
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது கடிதத்தில், “பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது. சமூகத்தின் பல தரப்பினருக்கும் இதுவரை 2 கோடி டோஸ்களுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதில் இருந்து எங்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துகொண்டு இருக்கின்றன. தனியார் துறையும் இந்த தடுப்பூசிகளையே கொள்முதல் செய்து வருகின்றன
எனினும், கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. உலக சுகாதார அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்படாத தடுப்பூசிகளை போட்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது.
No comments:
Post a Comment