இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 32-இன்ச் Smart TV இந்தியாவிலேயே இல்லை! சூப்பரப்பு!
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியாக Realme Smart TV Full-HD 32 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 32 இன்ச் Full எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி ஸ்க்ரீனுடன் வருகிறது. இது இந்தியாவில் மிகவும் "அரிதான" ஒரு டிஸ்பிளே ஆகும். ஏனெனில் இங்கு பெரும்பாலான 32 இன்ச் டிவிகளில் எச்டி (1366x768-பிக்சல்) ரெசல்யூஷன் ஸ்க்ரீன்களே உள்ளன.
இந்த புதிய ரியல்மி டிவி ஆனது ரியல்மி பட்ஸ் க்யூ 2, ரியல்மி நார்சோ 30 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
ரியல்மி ஸ்மார்ட் டிவி ஃபுல்-எச்டி 32 மாடலின் வழக்கமான விலை ரூ.18,999 ஆகும், ஆனால் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்
இந்த டிவி வருகிற ஜூன் 29 அன்று ரியல்மி.காம், பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்ஸ் வழியாகவும் வாங்க கிடைக்கும்.
அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
ரியல்மி ஸ்மார்ட் டிவி ஃபுல்-எச்டி 32 மாடல் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிவி ஆகும் மற்றும் இது கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அசல் ரியல்மி ஸ்மார்ட் டிவி வரம்பின் ஒரு பகுதியாகும்.
No comments:
Post a Comment