அப்பாவின் செல்போனில் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸ் ஆர்டர் செய்த "சுட்டி" குழந்தை... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

அப்பாவின் செல்போனில் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸ் ஆர்டர் செய்த "சுட்டி" குழந்தை...

அப்பாவின் செல்போனில் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸ் ஆர்டர் செய்த "சுட்டி" குழந்தை...


வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் மீது சற்று அதிகமான கவனம் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு குறுப்புகள் பல நேரங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் சில நேரங்களில் நமக்கே ஆப்பு வைத்தது போல ஆகிவிடும். தற்போது தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக குழந்தைகள் எல்லோரும் செல்போனை பயன்படுத்த துவங்கிவிட்டனர். அந்த செல்போனிற்குள் அவர்களை பாதுகாப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

இந்நிலையில் சீனாவில் தன் தந்தையுடன் இருந்த சிறுமி ஒருவர் தன் தந்தையின் செல்போனை எடுத்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய தன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு தந்தையும் தன் செல்போனை கொடுத்து தன் மகள் சிறு வயதிலேயே ஆன்லைன் ஆர்டர் செய்கிறாளே என ஆசையில் கொடுத்து ஆர்டர் செய்ய சொல்லிவிட்டார்.
அந்த மகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் அதை ஆர்டர் செய்துள்ளார். அதுவரை எல்லாம் நன்றாத்தான் சென்று கொண்டிருந்தது. நூடுல்ஸ் ஆர்டர் வந்து போது தான் அவர்களுக்கு பிரச்சனையே காத்திருந்தது. ஆர்டர் கொண்டு வந்தவர் நூடுல்ஸை ஒரு பெரிய வேனில் எடுத்து வந்தார். அவர்களிடம் நூடுல்ஸ் வந்திருக்கிறது என சொல்லி பில்லை கொடுத்துள்ளார். தந்தை அந்த பில்லை பார்த்தும் ஷாக் ஆகிவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad