கடைகளுக்கு 6 மாத வாடகை தள்ளுபடி; தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு வெளியிடுமா?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற கடைகளை தொடர்ச்சியாக மூடியே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதும் ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்படுவதால் கடை உரிமையாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் புதிய தளர்வுகளுடன் கடைகளை திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அனைத்து கடைகளையும் திறக்க பேரமைப்பு வலியுறுத்துகிறது
கொரோனா குறைந்த மாவட்டங்களில் கடைகளை திறக்க தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். வியாபாரிகள் மீது பொய் வழக்கு போட்டால் அந்த அதிகாரிகளை அரசு கண்டிக்க வேண்டும். சமீபத்தில் சென்னையில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
தேவையான அளவு தடுப்பூசி வந்தவுடன், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை வியாபாரிகள் கையில் எடுப்போம். கொரோனா தடுப்பு பணிகளில் அரசுக்கு வணிகர் பேரமைப்பு சங்கங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.
No comments:
Post a Comment