திமுக அரசு போடும் பக்கா ஸ்கெட்ச்; சிக்கப் போகும் அடுத்த மாஜி அமைச்சர்!
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையிலெடுத்து, அவர்கள் மீதான கைது படலங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலினும், திமுக அமைச்சர்களும் மக்கள் நலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உடன் ஆங்காங்கே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரையும் காண முடிந்தது. இதனால் அதிமுக மீது இணக்கமான போக்கை திமுக கடைபிடிக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் முன்னாள் அமைச்சர்கள் தாமாக வந்து சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகை சாந்தினி விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் அவர் தன்னை கைது செய்ய ஜூன் 9ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். இருப்பினும் அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மணிகண்டனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் கடைசியாக அவரது செல்போன் சிக்னல் காட்டிய இடத்தை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற தடை முடிந்த பிறகு எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பருப்பு டெண்டரில் மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சர் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment