‘7 வருடங்கள்’ கோப்பை வெல்ல முடியவில்லை…தொடரும் இந்திய அணியின் சோகம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

‘7 வருடங்கள்’ கோப்பை வெல்ல முடியவில்லை…தொடரும் இந்திய அணியின் சோகம்!

7 வருடங்கள்’ கோப்பை வெல்ல முடியவில்லை…தொடரும் இந்திய அணியின் சோகம்!

இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருப்பதன் மூலம், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிவரை சென்று தோல்வியைச் சந்திக்கும் இந்திய அணியின் சொதப்பல் பயணம் தொடர்கிறது..

6ஆவது நாள் (ரிசர்வ் டே) வரை நீடித்த இறுதிப் போட்டியில், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும், பும்ராவின் பந்து எடுபடாமல் போனது காரணமாகவும் புளு ஆர்மி தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 7 வருடங்களாக இறுதிப் போட்டி அல்லது அரையிறுதிப் போட்டிவரை முன்னேறும் இந்திய அணி அதில் தோல்விகளைச் சந்தித்து, ஒருமுறைகூட கோப்பை வெல்லாமல் இருந்து வருகிறது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கையிடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டது.
அதன்பிறகு, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.
2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடமும், 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடமும் இந்திய அணி தோற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad