நொச்சி இலை மருத்துவம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

நொச்சி இலை மருத்துவம்

நொச்சி இலை மருத்துவம்



உடல் சோர்வு மற்றும் உடல் வலி நீங்க 

கொஞ்சம் கூட ஓய்வு என்பது இன்றி கடுமையாக உழைப்பவர்களுக்கு உடல் சோர்வு, உடம்பு வலி, தசை பிடிப்பு, தசை வலி என இது போன்று பல வகையான பிரச்சனைகள் உண்டாகும், அப்படி பட்டவர்களுக்கு நொச்சி இலை சிறந்த மருத்துவ சிகிச்சையினை அளிக்கின்றது. அதாவது இரண்டு கைப்பிடி அளவு நொச்சி இலையை பறித்து கொள்ளுங்கள். பின் தங்கள் குளியலுக்கு தேவைப்படும் அளவிற்கு ஒரு பானையில் நீரை நிரப்பி கொள்ளுங்கள் அந்த நீரில் நொச்சி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். வெதுவெதுப்பானதும் அந்த நீரில் குளித்துவர உடல் வலி, உடல் சோர்வு, தசை பிடிப்பும், தசை வலி ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.

உடல் புத்துணர்ச்சி பெற:

உடல் புத்துணர்ச்சி அடைய சிறிதளவு நொச்சி இலையை பறித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் நீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்  தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் இந்த பானத்தை அருந்தினால் உடல் நமக்கு புத்துணர்ச்சி பெரும்.

சைனஸ் தலைவலி குணமாக 


 
நொச்சி இலை பொதுவாக சைனஸ் தலைவலியை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.  ஆகவே சைனஸ் தலைவலி குணமாக நொச்சி இலையுடன் சிறிது அளவு சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் சைனஸ் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அதேபோல் நொச்சி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி நல்ல சூடு பதம் இருக்கும் போதே துணியில் முடிந்து அதைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் தலைவலி குணமாகும். மேலும் நொச்சி இலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் பீனிசம் நோய்கள், ஒற்றைத்தலைவலி சேர்ந்து குறையும்.

ஆஸ்துமா குணமாக:
ஆஸ்துமா

 
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, இலவங்கம் சேர்த்து அப்படியே சாப்பிடலாம் அல்லது கஷாயமாக்கி குடிக்கலாம் இவ்வாறு செய்வதன் மூலம் ஆஸ்துமா நோய் தீவிரமாகாமல் குறையும்.

மூக்கடைப்பு சரியாக:-

தலைவலி மற்றும் சளி காரணமாக ஏற்பட கூடிய மூக்கடைப்பு பிரச்சனைக்கு நொச்சி இலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அதாவது நொச்சி இலையை நன்கு காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். பின் அகலம் குறைந்த மண்சட்டியில் அடுப்புக்கரியை தணலாக்கி, அதில் காய்ந்த நொச்சி பொடிகளை சேர்த்து அதிலிருந்து வரும் புகையை சுவாசிக்க மூக்கடைப்பு பிரச்சனையை சரியாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad