போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..!
New business ideas tamil:-
தொழில் முனைவோர்களுக்கு வணக்கம் இன்று நாம் முற்றிலும் புதுமையான தொழில் பற்றிய ஆலோசனைகளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். போட்டி இல்லாத புதிய தொழில் என்பதால் சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இப்போதே இந்த தொழிலை துவங்கி நல்ல வருமானம் பார்க்கலாம்.
சரி வாங்க அது என்ன புதிய தொழில் (New business ideas tamil) என்று இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம்
கட்டிட அமைப்பு:-
பத்துக்கு, பத்து அளவு கொண்ட ஒரு சிறிய அரை இருந்தால் போதும், இந்த தொழில் துவங்கலாம்.
புதிய தொழில் (New business ideas tamil) பற்றிய விவரம்:-
பழைய நியூஸ் பேப்பரை மொத்தமாக விலைக்கு வாங்க வேண்டும். இந்த பழைய நியூஸ் பேப்பரை பேப்பர் ஸ்ரேட்டர் மிஷினில் (paper shredder machine) கட் செய்ய வேண்டும்.
இவ்வாறு கட் செய்த பேப்பரை வைத்து என்ன தொழில் செய்வது என்று யோசிக்கின்றிர்களா..? இவ்வாறு கட் செய்த பேப்பரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யலாம். அவர்கள் இந்த கட் செய்த பேப்பரை எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள் என்றால் பொம்மை, கண்ணாடியால் செய்த பொருட்கள், மண்பாண்டங்கள், பழங்கள் போன்ற பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக அனுப்புவதற்கு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெளிநாட்டிற்கு பொருட்களை பேக்கிங் செய்து அனுப்புவதற்கு இந்த கட் செய்த பேப்பர்கள் அதிகம் தேவைப்படுகிறது.
இந்த புதிய தொழிலை வடமாநிலங்களில் மட்டுமே செய்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இது வரை யாரும் அதிகமாக செய்யாத தொழில் என்பதால். போட்டிகள் அதிகம் இருக்காது.
"https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"
சந்தை வாய்ப்பு எப்படி இருக்கும் ?
இந்த கட் செய்த பேப்பரை பொருட்களை பேக்கிங் செய்து அனுப்பும் நிறுவனங்களுடன் டீலிங் வைத்துக்கொண்டு சப்லை செய்யலாம். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், கோயமுத்தூர், சேலம், ஈரோடு, சென்னையில் (கோயம்பேடு, ஸ்ரீபெரம்பதூர், அம்பத்தூர்) போன்ற இடங்களில் இந்த கட் செய்த பேப்பரின் தேவை அதிகம் இருக்கும். குறிப்பாக தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகம் இருப்பதினால் தயக்கம் இல்லாமல் இந்த தொழிலை துவங்கலாம்.
மூலப்பொருட்கள்:-
இந்த புதிய தொழில் பொறுத்தவரை தேவைப்படும் மூலப்பொருட்கள் என்றால் பழைய நியூஸ் பேப்பர் தான். ஒரு கிலோ நியூஸ் பேப்பரின் விலை 8 முதல் 10 ரூபாய் வரை தான் இருக்கும். இந்த நியூஸ் பேப்பரை மொத்தமாக வாங்கி வைத்து கொண்டு கட் செய்ய பயன்படுத்தலாம்.
இயந்திரம்:-
இந்த சுயதொழில் பொறுத்தவரை Paper Shredder Machine தேவைப்படும். இந்த இயந்திரம் 25,000/- முதல் 1,50,000/- வரை கிடைக்கின்றது. இந்த paper shredder machine-னை www.alibaba.com, www.amazon.in, dir.indiamart.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆடர் செய்தும் வாங்கி கொள்ளலாம்.
No comments:
Post a Comment